/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண் தோண்டப்பட்ட நிலையில் விவசாயி சடலம்பவானிசாகர் அருகே அதிர்ச்சி
/
கண் தோண்டப்பட்ட நிலையில் விவசாயி சடலம்பவானிசாகர் அருகே அதிர்ச்சி
கண் தோண்டப்பட்ட நிலையில் விவசாயி சடலம்பவானிசாகர் அருகே அதிர்ச்சி
கண் தோண்டப்பட்ட நிலையில் விவசாயி சடலம்பவானிசாகர் அருகே அதிர்ச்சி
ADDED : ஜன 18, 2025 01:36 AM
பவானிசாகர்,: பவானிசாகர் அருகே கண் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், விவசாயி இறந்து கிடந்தது, அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகரை அடுத்த புதுபீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன், 57; விவசாயியான இவரின் மனைவி ஜெயா. தம்பதியருக்கு இரு மகள்கள், இரு
வருக்கும் திருமணமாகி விட்டது. ஈரோட்டை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கு
புதுபீர்கடவு கிராமத்தில், 14 ஏக்கர் பரப்பிலான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை, 15 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தோட்டத்தில் வாழை, பாக்கு மற்றும் மல்லி பயிரிடப்பட்டுள்ளது. யானை உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க, தினமும் இரவில் தோட்டத்தில் செல்வன் காவல் இருப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு காவலுக்கு சென்றவர், நேற்று காலை வீடு திரும்பவில்லை. மனைவி ஜெயா செல்போனில் அழைத்தும் எடுக்காததால் தோட்டத்துக்கு சென்றார்.
தோட்டத்து சாலையில் வலது கண் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், செல்வன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின்படி பவானிசாகர் போலீசார் விரைந்தனர். கண் தோண்டி எடுக்கப்பட்டிருந்ததால், ஈரோட்டில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை, ஆய்வு நடந்தது. மோப்பநாய் தோட்டத்தில் இருந்து, 200 மீட்டர் துாரம் ஓடி மீண்டும் திரும்பி வந்தது. சத்தி டி.எஸ்.பி., சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையில், விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், 'உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே செல்வன் இறப்புக்கான காரணம் தெரியவரும். தற்போதைக்கு சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்' என்றனர்.