/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
/
கொடுமுடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
கொடுமுடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
கொடுமுடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
ADDED : ஜன 22, 2025 01:29 AM
கொடுமுடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
கொடுமுடி:கழிவுநார் மில்லை இயங்க அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் தொடங்கிய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
கொடுமுடி அருகே இச்சிப்பாளையம் கிராமத்தில், தனியார் கழிவு நார்மில்லுக்கு அனுமதி தரக்கூடாது என்று கூறி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், இசிப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி தலைமை வகித்தார். சங்க அகில
இந்திய துணைத்தலைவர் லாசர் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.மக்களுக்கு பாதிப்பையும், காற்று மாசு மற்றும் குடிநீரை கெடுக்கும் நார்மில்லை துவங்க கூடாது. அதிகாரிகள் அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தி, 75 பெண்கள் உட்பட 140க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொடுமுடி போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.