/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் கைது

ADDED : ஜன 22, 2025 01:30 AM
மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் கைது
ஈரோடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்காக, ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மறியலில் ஈடுபட்டனர். அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட உதவி செயலாளர் ரேணுகா, அம்மணியம்மாள் பேசினர்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திரா மாநிலத்தில் உள்ளது போல, 6,000, 10,000, 15,000 ரூபாய் என உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் துறை மூலமே உதவித்தொகையை வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், 50 சதவீதம், 4 மணி நேரப்பணி என்ற பழைய நிலை தொடர வேண்டும்.
8 மணி நேரம் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும். அனை வருக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 86 பேரை போலீசார் கைது செய்தனர்.
* பெருந்துறை தாலுகா குழு சார்பில், பெருந்துறை தாலுகா அலுவலகம் எதிரில், மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, 17 பெண்கள் உட்பட, 36 பேரை, பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
* பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் தலைமையில், 95 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பவானிசாகர் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
* சத்தியமங்கலத்தில் வட்டார தலைவர் ஆனந்தன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார செயலாளர் ராமதாஸ், மார்க்.- கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார், சத்தி நகர செயலாளர் வாசுதேவன் ஆகியோர் பேசினர். மறியலில் ஈடுபட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தாளவாடி பஸ் ஸ்டாண்டில், வட்டார செயலாளர் ராஜூ தலைமையில், மறியலில் ஈடுபட்ட, பெண்கள் உட்பட, 60 பேர் கைது செய்யப்பட்டனர்.