/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலியஸ்டர் ஸ்டேப்பிள் படுக்கை வரியை குறைக்க கோரிக்கை
/
பாலியஸ்டர் ஸ்டேப்பிள் படுக்கை வரியை குறைக்க கோரிக்கை
பாலியஸ்டர் ஸ்டேப்பிள் படுக்கை வரியை குறைக்க கோரிக்கை
பாலியஸ்டர் ஸ்டேப்பிள் படுக்கை வரியை குறைக்க கோரிக்கை
ADDED : அக் 01, 2025 01:41 AM
ஈரோடு:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பும், மத்திய ஜி.எஸ்.டி., ஈரோடு 1 & II டிவிஷன்ஸ் இணைந்து நடத்திய, ஜி.எஸ்.டி புதிய வரி விளக்கக் கூட்டம், கடந்த 24ம் தேதி ஈரோட்டில் நடந்தது. பேட்டியா தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தனபாலன் வரவேற்றாார். பொருளாளர் முருகானந்தம், டேக்சேஷன் கமிட்டி சேர்மன் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மத்திய ஜி.எஸ்.டி. துணை ஆணையர் பிரபாகரன், ஜி.எஸ்.டி குறித்து விளக்க வுரை ஆற்றினார். தமிழ்நாடு ஜி.எஸ்.டி உதவி ஆணையர் சௌம்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சப்பாத்தி, பரோட்டா ஆகிய உணவுகளுக்கு வரி விலக்கு அளித்தது, இட்லிக்கு 5 சதவீத வரி இருப்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. எனவே இட்லி மாவுக்கும், 5 சதவீத வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அரிசியை அதிகமாக உபயோகப்படுத்தும் தமிழகத்தில் அரிசிக்கும் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தி, பாலியஸ்டர் ஸ்டேப்பிள் பைபர் மீது வரி விகிதத்தை, 18 சதவீதத்திலிருந்து 5 ஆக குறைத்ததற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதும் பாலியஸ்டர் ஸ்டேப்பிள் பைபர் மூலம் தயாரிக்கப்படும் தலையணைகள், படுக்கைகள், குழந்தை படுக்கைகள் ஆகியவைகளுக்கு, 18 சதவீதம் வரியே விதிக்கப்படுகிறது. இதனால் வணிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பேட்டியா பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.