/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காந்தி ஜெயந்திக்காக வரும் 11ல் கிராமசபை
/
காந்தி ஜெயந்திக்காக வரும் 11ல் கிராமசபை
ADDED : அக் 01, 2025 01:41 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் அக்., 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடக்க இருந்த கிராமசபை கூட்டம், நிர்வாக காரணத்தால் அக்., 11 காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது. இடம், நேரம் ஆகியவை அந்தந்த பஞ்., நிர்வாகம், பொதுமக்களுக்கு அறிவிக்கும்.
கிராமசபை கூட்டத்தில் ஏப்., 1 முதல் செப்., 30 வரை பஞ்., நிர்வாகம், பொது நிதி செலவினம், பஞ்., தணிக்கை அறிக்கை வைத்து ஒப்புதல் பெறுதல், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு உள்ளிட்டவை குறித்து விவாதித்தல், 100 நாள் வேலை திட்டப்பணிகள் போன்றவை விவாதிக்கப்படும். இவற்றை கண்காணிக்க வட்டார அளவில் உதவி இயக்குனர் நிலையில் பற்றாளர்கள், பஞ்., அளவில் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.