/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவி பறிப்பு: இ.பி.எஸ்., அதிரடி
/
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவி பறிப்பு: இ.பி.எஸ்., அதிரடி
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவி பறிப்பு: இ.பி.எஸ்., அதிரடி
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவி பறிப்பு: இ.பி.எஸ்., அதிரடி
ADDED : அக் 01, 2025 01:42 AM
கோபி:முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த, 40 பேர் வகித்து வந்த அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க, பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு, 10 நாட்கள் கெடுவிதித்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட கோபி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையனின் அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், அவருக்கு ஆதரவு அளித்த முன்னாள் எம்.பி., சத்தியபாமா, ஒன்றிய செயலர்கள் தம்பி சுப்பிரமணியம், குறிஞ்சி நாதன் உள்ளிட்டோர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நடந்த, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த செப்.,23ல், கோபி வழியாக சென்ற பொதுச்செயலர் இ.பி.எஸ்.,ஐ., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அவரின் ஆதரவாளர்கள் அவரை வரவேற்க செல்லவில்லை. இதற்கிடையில், ஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டத்தில் மீண்டும், 40 பேரை அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவித்து, இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
அவர்களில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் செல்வம், மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணை செயலர் மவுதீஸ்வரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முத்துசாமி, கோபி மேற்கு ஒன்றிய பொருளாளர் பாண்டு ரங்கசாமி, அந்தியூர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் ராஜ்குமார், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலர் சிவராஜ்.
கோபி நகர துணை செயலர் இளங்கோவன், கோபி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் முத்துரமணன், புன்செய் புளியம்பட்டி நகர செயலர் மூர்த்தி, நம்பியூர் டவுன் பஞ்சாயத்து செயலர் கருப்பண கவுண்டர், எலத்துார் டவுன் பஞ்.,செயலர் சேரன் சரவணன், லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்து செயலர் மோகன்குமார், பெரிய கொடிவேரி டவுன் பஞ்சாயத்து செயலர் திருவேங்கடம் உள்பட, 40 பேர் அவரவர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவித்துஇ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.