/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடையின்றி குடிநீர் வினியோகம் பிரசாரத்தில் அமைச்சர் பேச்சு
/
தடையின்றி குடிநீர் வினியோகம் பிரசாரத்தில் அமைச்சர் பேச்சு
தடையின்றி குடிநீர் வினியோகம் பிரசாரத்தில் அமைச்சர் பேச்சு
தடையின்றி குடிநீர் வினியோகம் பிரசாரத்தில் அமைச்சர் பேச்சு
ADDED : ஜன 29, 2025 01:28 AM
தடையின்றி குடிநீர் வினியோகம் பிரசாரத்தில் அமைச்சர் பேச்சு
ஈரோடு, :-ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் சந்திர குமாரை ஆதரித்து, ஈரோடு மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட கோட்டை பகுதியில், அமைச்சர் முத்துசாமி கூட்டணி கட்சியினருடன் நேற்று ஓட்டு சேகரித்தார். நாச்சியப்பா வீதி, முனியப்பன் கோவில் வீதி, காசியண்ண வீதி, தெப்பக்குளம் வீதி பழனிமலை வீதிகளில், உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு அமைச்சர் பேசியதாவது:
தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, மகளிருக்கு உரிமைத் தொகை என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் தி.மு.க., அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகள் இருப்பார்கள். மாநகரில் தடையில்லா குடிநீர் வழங்க, அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அரசு தொடர்ந்து நீடித்து, மேலும் பல புதிய திட்டங்களை செயல்படுத்த உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுப்பதிவு செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.
அமைச்சருடன் முன்னாள் எம்.பி., கந்தசாமி, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மாநில நெசவாளரணி சச்சிதானந்தம், மாநில விவசாய அணி குறிஞ்சி சிவகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், கோட்டை பகுதி செயலாளர் ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

