/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 05, 2025 01:18 AM
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
காங்கேயம் : காங்கேயம் தொகுதிக்குட்பட்ட காங்கேயம் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சார்பில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் காங்கேயத்தில் நடந்தது. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். புதியதாக ஒன்பது பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பது மற்றும் ஐந்து பூத்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிப்பது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
அன்னுாரில் விவசாயிகள் சார்பில் நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்கும், பொது செயலாளர் பழனிச்சாமிக்கு, வரவேற்பு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசித்தனர். கூட்டத்தில் காங்கேயம் ஒன்றிய செயலாளர் நடராஜ், நகர செயலாளர் வெங்கு மணிமாறன் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.