/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெரியார் திடல் பகுதியில் மின் கம்பத்தால் அபாயம்
/
பெரியார் திடல் பகுதியில் மின் கம்பத்தால் அபாயம்
ADDED : பிப் 05, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியார் திடல் பகுதியில் மின் கம்பத்தால் அபாயம்
கோபி, :கோபி அருகே பெரியார் திடல் பஸ் நிறுத்தத்தின் மத்தியில், சத்தி பிரதான சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள மின் கம்பத்தின் மீது சமீபத்தில் லாரி மோதியது. இதில் கம்பம் சேதமடைந்ததால், ஒயர்கள் வெளியே தொங்குகிறது. மக்கள், வாகன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் சாலையில் நீட்டியபடி தொங்கும் ஒயரால் ஆபத்து காத்திருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மின் ஒயரை முறையாக அகற்றி பாதுகாக்க, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.