/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கோரி தஞ்சம்
/
காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கோரி தஞ்சம்
ADDED : பிப் 05, 2025 01:23 AM
காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கோரி தஞ்சம்
சென்னிமலை, :ஈரோடு, சாஸ்திரி நகர், வாய்க்கால் மேட்டை சேர்ந்த சிவகுமார் ராஜா மகன் அஜித்குமார், 23; டிப்ளமோ படித்து விட்டு ஷூ ஷோரூமில் வேலை பார்த்தார். வீரப்பன்சத்திரம், மஜீத் வீதியை சேர்ந்த முகமது ஜலால் மகள் சஹானா சப்ரின், 19; பிளஸ் -2 படித்துள்ளார். இருவருக்கும் மூன்றாண்டுகளுக்கு முன் வேலை பார்க்கும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
சஹானா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலையில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். எஸ்.ஐ., சரவணன் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசினார். சஹானாவின் பெற்றோர் ஏற்று கொள்ளாததால் அஜித்குமாரின் பெற்றோர், ஜோடியை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.