/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைத்தறி துணி விற்பனை சவால் குறித்த கருத்தரங்கு
/
கைத்தறி துணி விற்பனை சவால் குறித்த கருத்தரங்கு
ADDED : பிப் 09, 2025 01:08 AM
கைத்தறி துணி விற்பனை சவால் குறித்த கருத்தரங்கு
சென்னிமலை:இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், கைத்தறி துணி விற்பனையில் நிலவும் சவால்கள் குறித்த கருத்தரங்கு, சென்னிமலையில் நடந்தது. இதில் கைத்தறி துறையின் முக்கிய சவால் குறித்தும் விவாதித்தனர். குறிப்பாக கைத்தறி தயாரிப்பு, விற்பனை சமகால சந்தையில் ஏற்படும் சிரமம் மற்றும் சிக்கல் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெசவாளர்கள், வியாபாரிகளும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். துறை முன்னேற்றத்துக்கு தேவையான பயிற்சி, வழிகாட்டல் உதவி வழங்க வலியுறுத்தினர். திட்டத்தின் முதன்மை பயிற்சியாளர் நவீன்குமார், ஹேண்ட் மேட் இன் இந்தியா திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

