/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.இ.டி., கலை கல்லுாரியில் மேலாண்மை சந்திப்பு நிகழ்வு
/
வி.இ.டி., கலை கல்லுாரியில் மேலாண்மை சந்திப்பு நிகழ்வு
வி.இ.டி., கலை கல்லுாரியில் மேலாண்மை சந்திப்பு நிகழ்வு
வி.இ.டி., கலை கல்லுாரியில் மேலாண்மை சந்திப்பு நிகழ்வு
ADDED : பிப் 09, 2025 01:24 AM
வி.இ.டி., கலை கல்லுாரியில் மேலாண்மை சந்திப்பு நிகழ்வு
ஈரோடு:ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான மேலாண்மை சந்திப்பு நடந்தது. இதில், 20-க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 200 எம்.பி.ஏ., மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிறந்த மேலாளர் போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்கல்லுாரி சஷ்டிகா வெற்றி பெற்றார். தொழில் வினாடி வினா போட்டியில் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லுாரி அரவிந்த், அருண் தினேஷ் வென்றனர். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் நல்லசாமி வரவேற்றார். கல்லுாரி நிர்வாக அலுவலர் லோகேஸ்குமார் வாழ்த்துரை வழங்கினார். எம்.பி.ஏ., துறைத்தலைவர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.