/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேரோட்டத்தில் பழமை மாறாத மரியாதை; இன்ஸ்பெக்டர் நெகிழ்ச்சி
/
தேரோட்டத்தில் பழமை மாறாத மரியாதை; இன்ஸ்பெக்டர் நெகிழ்ச்சி
தேரோட்டத்தில் பழமை மாறாத மரியாதை; இன்ஸ்பெக்டர் நெகிழ்ச்சி
தேரோட்டத்தில் பழமை மாறாத மரியாதை; இன்ஸ்பெக்டர் நெகிழ்ச்சி
ADDED : பிப் 13, 2025 01:11 AM
தேரோட்டத்தில் பழமை மாறாத மரியாதை; இன்ஸ்பெக்டர் நெகிழ்ச்சி
சென்னிமலை:சென்னிமலை, முருகன் கோவில் தேரோட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தரும் பழமை மாறாத மரியாதை இன்னும் தொடர்கிறது.
சென்னிமலை, முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் ரதம் பிடிக்கும் போது, கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சென்னிமலை போலீஸ் ஸ்டேஷன் சென்று இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க அழைத்து வருவர்.அதேபோல், தேரோட்டம் முடிந்தவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விடுவர். விழாவில் எந்த வி.ஐ.பி., கலந்து கொண்டாலும், சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு தான் இங்கு மரியாதை.
மேலும், கோவில் பணியாளர்களுக்கு ஸ்டேஷனில் இனிப்பு, காரம், டீ கொடுத்து மரியாதை செய்வர். இந்த நடைமுறை, 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்வதாக பெரியவர்கள் கூறுகின்றனர். நேற்றும் இந்த மரியாதை பழமை மாறாமல் தொடர்ந்தது. இதில், சென்னிமலை இன்ஸ்பெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள சிவக்குமார், ''நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இந்த நடைமுறையும், மரியாதையும் புதுமையாக உள்ளது. மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது. கோவில் நிர்வாகத்திற்கும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான முருகபக்தர்களுக்கும், என்றும் தொண்டு செய்ய முருகன் அருள்புரிய வேண்டும்'' என்றார்.