/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆச்சார்யா நரேந்திர தேவோ நினைவு தினம் அனுசரிப்பு
/
ஆச்சார்யா நரேந்திர தேவோ நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : பிப் 20, 2025 01:49 AM
ஆச்சார்யா நரேந்திர தேவோ நினைவு தினம் அனுசரிப்பு
ஈரோடு:ஈரோடு, காளிங்கராயன் இல்ல விடுதியில் உள்ள, ஆச்சார்யா நரேந்திர தேவோ இல்லத்தில், அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம், சீதாபூரில் பிறந்த ஆச்சாரியா நரேந்திர தேவோ, காந்தியடிகளின் கட்டளைப்படி அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸில் சோசலிஸ்ட் குழுவை உருவாக்கி, சுதந்திரத்துக்கு பின் கருத்து வேறுபாட்டால், காங்கிரஸில் இருந்து வெளியேறினார். அசோக்மேத்தா, மதிலிமாகி போன்றோருடன் சேர்ந்து சோசலிச கட்சியை நிறுவி போராடினார்.
தமிழகம் வந்த அவர், உடல் நலக்குறைவால் பெருந்துறை சானிடோரியத்தில் சிகிச்சை பெற்று கடந்த, 1956 பிப்., 19ல், ஈரோடு காளிங்கராயன் விடுதி இல்லத்தில் இறந்தார். அவர் தங்கிய அறையில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
காங்., முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, த.மா.கா., மாநில துணைத் தலைவர் விடியல் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள்ராஜன், அ.தி.மு.க., முருகானந்தம் உட்பட பலர், அவரது சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

