/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு மானியத்தில் செயல்படும்தொழில் நிறுவனத்தில் ஆய்வு
/
அரசு மானியத்தில் செயல்படும்தொழில் நிறுவனத்தில் ஆய்வு
அரசு மானியத்தில் செயல்படும்தொழில் நிறுவனத்தில் ஆய்வு
அரசு மானியத்தில் செயல்படும்தொழில் நிறுவனத்தில் ஆய்வு
ADDED : பிப் 20, 2025 01:50 AM
அரசு மானியத்தில் செயல்படும்தொழில் நிறுவனத்தில் ஆய்வு
ஈரோடு:ஈரோடு, 46 புதுார், வாய்க்கால்மேடு பகுதியில் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில், தமிழக அரசின் மூலம் வங்கி மானியம் பெற்று, கூரை தகடுகள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஆய்வு செய்தார். தமிழக அரசின் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படுத்திடவும், 'புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில்' மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்துகிறது.
திட்ட மதிப்பீட்டில், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 75 லட்சம் ரூபாய் வரை முதலீட்டு மானியம், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இம்மாவட்ட இலக்கான, 13 திட்டங்களுக்கு, 1.31 கோடி ரூபாய் மானியம் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, 23 திட்டங்களுக்கு வங்கிகளில் கடன் ஒப்பளிப்பு செய்து, மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் நாடா இல்லா விசைத்தறி, கூரை தகடுகள் தயாரிப்பு, பிளை ஆஷ் பிரிக்ஸ் உற்பத்தி, உடற்பயிற்சி கூடம் போன்ற தொழில்கள் துவங்கப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வு செய்து, திட்ட செயல்பாடுகள், பயன்கள் பற்றி கேட்டறிந்தார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.