/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., அவலங்களை மக்களிடம் எடுத்துசெல்ல அ.தி.மு.க., கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : பிப் 20, 2025 01:50 AM
தி.மு.க., அவலங்களை மக்களிடம் எடுத்துசெல்ல அ.தி.மு.க., கூட்டத்தில் வலியுறுத்தல்
ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலர்கள், பகுதி செயலர்கள், பூத் கமிட்டியினர் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பூத் கமிட்டிக்கான மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பேசியதாவது: பூத் கமிட்டியை சரியாக அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தாலே, வெற்றி எளிதாகிவிடும். 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ்., தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். தி.மு.க., ஆட்சியின் அவலங்களை, மக்களிடம் சொல்ல வேண்டும். தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதுபற்றி விளக்கி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் நல்ல திட்டங்கள், செயல்பாடுகளை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பெரிய வெற்றியை பெற முடியும். இவ்வாறு பேசினார்.
முன்னாள் மேயர் மல்லிகா, பகுதி செயலாளர் பழனிசாமி, முருகுசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.