/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இளைஞர் நீதி குழும சமூக பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
இளைஞர் நீதி குழும சமூக பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 21, 2025 12:47 AM
இளைஞர் நீதி குழும சமூக பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு:ஈரோடு மாவட்ட இளைஞர் நீதி குழுமத்துக்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ஒரு பெண் உட்பட இரு உறுப்பினர்கள், அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். இப்பதவி அரசு பணி அல்ல. குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது, 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும்.
குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சட்டம் அல்லது சமூகவியல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெறும் தொழில் புரிபவராக இருக்க வேண்டும். 35 முதல், 65 வயதுக்கு உட்பட்டவர்கள், தங்கள் விண்ணப்பத்தை, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டடம், 6வது தளம், ஈரோடு - 636 011' என்ற முகவரியில் பெறலாம். அல்லது துறை சார்ந்த இணைய தள முகவரி, https://dsdc[imms.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தியான விண்ணப்பத்தை வரும் மார்ச், 7க்குள், 'இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600010' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.