/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தகுதி அடிப்படையில் பட்டா; வருவாய் துறையினருக்கு உத்தரவு
/
தகுதி அடிப்படையில் பட்டா; வருவாய் துறையினருக்கு உத்தரவு
தகுதி அடிப்படையில் பட்டா; வருவாய் துறையினருக்கு உத்தரவு
தகுதி அடிப்படையில் பட்டா; வருவாய் துறையினருக்கு உத்தரவு
ADDED : பிப் 21, 2025 12:51 AM
தகுதி அடிப்படையில் பட்டா; வருவாய் துறையினருக்கு உத்தரவு
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கலெக்டர் பேசியதாவது:
அதிகளவில், வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட இடங்களின் பட்டியல், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பிற துறைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இனங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 'ஆன் லைன்' சான்றிதழ், பட்டா மாறுதல் ஆகியவை உரிய காலத்திற்குள் முடிவு செய்யப்பட வேண்டும். வருவாய்த்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய வட்டங்களை சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நத்தம், இட்டேரி, பூமி தானம், பிற்படுத்தப்பட்டோர் நத்தம், ஆதி திராவிடர் நத்தம், வண்டிப்பாதை, சாலை, தரிசு, தீர்வை ஏற்படாத தரிசு, தீர்வை ஏற்பட்ட தரிசு, பனந்தோப்பு, மந்தை ஆகிய நிலங்களின் விவரங்கள் குறித்தும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ள விவரங்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை முடித்து, தகுதியுள்ள மக்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்கும் வகையில், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

