/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் மருத்துவ முகாமில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்
/
காங்கேயத்தில் மருத்துவ முகாமில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்
காங்கேயத்தில் மருத்துவ முகாமில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்
காங்கேயத்தில் மருத்துவ முகாமில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்
ADDED : பிப் 23, 2025 01:54 AM
காங்கேயத்தில் மருத்துவ முகாமில் பெட்டகம் வழங்கிய அமைச்சர்
காங்கேயம்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பாலசமுத்திரம்புதுார் ஊராட்சி, தொட்டியபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நேற்று நடந்தது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார். ஆறு பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், ஐந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டம், பள்ளி மாணவர் மூவருக்கு மூக்கு கண்ணாடிகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கேயம் தாசில்தார் மோகனன், காங்கேயம் பி.டி.ஓ., விமலாதேவி, வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார், காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் வர்த்தக செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 3,089 மூட்டைகளில், ௧.௫௫ லட்சம் கிலோ வரத்தானது. முதல் தரம் கிலோ, 134.48 ரூபாய் முதல் 151.83 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 30.71 ரூபாய் முதல் 144.39 ரூபாய் வரை, ௨.௧௨ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* சத்தி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 2,175 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கதளி கிலோ, 55 ரூபாய், நேந்திரன்-48 ரூபாய்க்கு விற்றது. பூவன் தார், 710 ரூபாய், ரஸ்தாளி- 590, தேன்வாழை-770, செவ்வாழை-1,120, ரொபஸ்டா-430, பச்சைநாடன்-41௦ ரூபாய் என, 4.89 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று நடந்தது. துவரம் பருப்பு (கிலோ) மற்றும் குண்டு உளுந்து, தலா 120 ரூபாய், பச்சைபயிர் மற்றும் பாசிப்பருப்பு தலா, 130 ரூபாய், கொள்ளு, 70, மல்லி, 120, சீரகம், 320, வெந்தயம் மற்றும் பொட்டுக்கடலை, 100 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 100, புளி, 120 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையும், வரமிளகாய், 170, பூண்டு, 100, மிளகு, 800, கடலைப்பருப்பு, 100 ரூபாய் என விற்பனையானது. புதிய ரகங்கள் வந்ததால், விற்பனை அமோகமாக நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
* சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்துக்கு, நாட்டு சர்க்கரை, 2,800 மூட்டை, உருண்டை வெல்லம், 2,100 மூட்டை, அச்சு வெல்லம், 400 மூட்டை வரத்தானது. நாட்டுச்சர்க்கரை மூட்டை, 1,200 ரூபாய் முதல் 1,300 ரூபாய்; உருண்டை வெல்லம், ௧,280 ரூபாய் முதல் 1,380; அச்சு வெல்லம், 1,320 ரூபாய் முதல் 1,390 ரூபாய் வரை விற்றது.
* கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, ஒரே விலையாக, 2,700 ரூபாய்க்கு நேற்று ஏலம்போனது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,580 ரூபாய் முதல், 2,640 ரூபாய் வரை ஏலம்போனது. வரத்தான, 1,736 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, 45.32 லட்சம் ரூபாய்க்கு, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்தது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 60 ரூபாய், நேந்திரன், 40 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 530 ரூபாய், தேன்வாழை, 700, செவ்வாழை, 1,310, ரஸ்த்தாளி, 640, பச்சைநாடான், 420, ரொபஸ்டா, 510, மொந்தன், 330 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,105 வாழைத்தார்களும், 10.94 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 11 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்றது.