/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாட்கோ மூலம் உயர் கல்வி விண்ணப்பிக்க அழைப்பு
/
தாட்கோ மூலம் உயர் கல்வி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மார் 06, 2025 01:14 AM
தாட்கோ மூலம் உயர் கல்வி விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு பி.எஸ்.சி., (ஹாஸ்பிட்டாலிட்டி அன்ட் ேஹாட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்), 3 ஆண்டு முழு நேர படிப்பும், ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டய படிப்பும், 10ம் வகுப்பு முடித்தோர், ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல் கைவினைஞர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புக்கான செலவீனத்தை தாட்கோ ஏற்கும்.
படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் திறமை அடிப்படையில் நட்சத்திர விடுதி, உயர்தர உணவகம், விமானத்துறை, கப்பல் துறை, சேவை துறை நிறுவனங்களில் பணிபுரிய வழி செய்யப்படும். தகுதியானவர்கள் தாட்கோ இணைய தளமான, www.tahdco.com ல் பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஆறாவது தளத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகலாம்.