/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வரிஒழுங்கு செய்வதாக அமைச்சர் உறுதி
/
மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வரிஒழுங்கு செய்வதாக அமைச்சர் உறுதி
மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வரிஒழுங்கு செய்வதாக அமைச்சர் உறுதி
மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வரிஒழுங்கு செய்வதாக அமைச்சர் உறுதி
ADDED : மார் 06, 2025 01:14 AM
மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட வரிஒழுங்கு செய்வதாக அமைச்சர் உறுதி
ஈரோடு:வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி கடுமையாக உயர்ந்துள்ளதாக, தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள், தி.மு.க., எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். சில இனங்களில் வரி விதிப்பில் ஏற்ற தாழ்வு வந்ததை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளனர். மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடுகையில் கொஞ்சம் வரி அதிகமாக இங்கு விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக செய்யும்போது இதுபோன்ற குறைபாடு வரும். இதுபற்றி, அமைச்சர் நேரு, முதல்வர் அலுவலகத்துக்கும் தெரிவித்துள்ளோம். இந்த வரி விதிப்பில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை ஒழுங்கு செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை, சத்து பெட்டகம் போன்றவற்றுக்கான தொகை தாமதமாக வருவதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி பகுதியில் மோட்டார் பிரச்னை இருந்ததால், தண்ணீர் வினியோகத்தில் பிரச்னை எழுந்தது. தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழு அளவில் தண்ணீர் வழங்க கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.