/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை அருகே மாரியம்மன்கோவில் கும்பாபிேஷக விழா
/
சென்னிமலை அருகே மாரியம்மன்கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : மார் 13, 2025 01:43 AM
சென்னிமலை அருகே மாரியம்மன்கோவில் கும்பாபிேஷக விழா
சென்னிமலை:சென்னிமலை அருகே, மேற்கு புதுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன், சித்தி விநாயகர், கருப்பண்ணசாமி, ஓம்பாயி மற்றும் செலம்பாவி சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைத்து திருப்பணி செய்யப்பட்டது.
பின்னர் கும்பாபிஷேக விழா கடந்த, 9ல் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதையொட்டி முருகனடிமை சுப்புசாமி முன்னிலையில், மாரியம்மன், கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேற்கு புதுப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.