/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி பி.கே.ஆர்., மகளிர் கலைகல்லுாரியில் மகளிர் தினவிழா
/
கோபி பி.கே.ஆர்., மகளிர் கலைகல்லுாரியில் மகளிர் தினவிழா
கோபி பி.கே.ஆர்., மகளிர் கலைகல்லுாரியில் மகளிர் தினவிழா
கோபி பி.கே.ஆர்., மகளிர் கலைகல்லுாரியில் மகளிர் தினவிழா
ADDED : மார் 13, 2025 02:02 AM
கோபி பி.கே.ஆர்., மகளிர் கலைகல்லுாரியில் மகளிர் தினவிழா
கோபி:ஈரோடு மாவட்டம், கோபி. பி.கே.ஆர்., மகளிர் கலைக்கல்லுாரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
துணை முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கொங்குச்செல்வி சாந்தாமணி கலந்து கொண்டு பேசுகையில்,' வாழ்க்கைக்கான திருப்பு
முனை வகுப்பறையில் தான் தொடங்குகிறது. வகுப்பறையின் வல்லமையை மாணவர்கள் உணர வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் வரலாறு வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டி, பெண் கல்வியின் அவசியத்தை' எடுத்துரைத்தார். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவியர்களின் பெற்றோருக்கு கேடயம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு துறை வாயிலாக, வேலைவாய்ப்பு பெற்ற மாணவியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பி.கே.ஆர்., மகளிர் கலைக்கல்லுாரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடாசலம், துணை முதல்வர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தனலட்சுமி, வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் அரியநாச்சியம்மாள் நன்றி கூறினார்.