/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை
/
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை
ADDED : மார் 15, 2025 01:44 AM
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை
ஈரோடு:
மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தி, 'வாங்குவோர் - விற்போர் சந்திப்பு கூட்டம்' ஈரோட்டில் நேற்று நடந்தது.
ஈரோடு, பவானி, அந்தியூர், சென்னிமலை, பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி உட்பட பல்வேறு பகுதி மகளிர் குழுவினர், தாங்கள் உற்பத்தி செய்த மரச்செக்கு எண்ணெய், பாத்ரூம் கிளீனர், தேங்காய் தொட்டியால் ஆன அலங்கார பொருட்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை தட்டுகள், ஹெர்பல் நேப்கின், சோப்புகளை விற்பனைக்கு வைத்தனர்.
தவிர, கைவினை பொருட்கள், மண் பாண்டங்கள், பவானி ஜமக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவை, துண்டு, ஆயுத்த ஆடைகள், கால் மிதியடிகள், டிசைன் மிதியடிகளை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
மேலும், சிறு தானியங்கள், சிறுதானிய உணவு பொருட்கள், தேன், திண் பண்டங்கள், பனங்கருப்படி, பழங்கள், வேர்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவற்றையும் விற்பனைக்கு இடம் பெற்றது. பல்வேறு பகுதி கடைக்காரர், வியாபாரிகள், மக்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனைக்கு பொருட்களை வாங்கி சென்றனர்.