/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வ.உ.சி., பூங்காவுக்கு குண்டு மிரட்டல்போலீசில் சிக்கிய திருச்சி ஆசாமி

ADDED : மார் 21, 2025 01:20 AM
வ.உ.சி., பூங்காவுக்கு குண்டு மிரட்டல்போலீசில் சிக்கிய திருச்சி ஆசாமி
ஈரோடு:வ.உ.சி., பூங்காவுக்கு குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மதியம், ஒரு மொபைல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வ.உ.சி., பூங்கா பின்புறம், 25வது கேட் நெம்பரில் வெடிகுண்டு உள்ளது. சில மணி துளிகளில் வெடிக்க உள்ளது எனக்கூறி அழைப்பு துண்டித்துள்ளார்.
கருங்கல்பாளையம் போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. அதேசமயம் புரளியை ஏற்படுத்திய ஆசாமியின் மொபைல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. நேற்று காலை ஆசாமி போனை ஆன் செய்துள்ளார். சேலம், சன்னியாசிபட்டியில் இருப்பதை அறிந்த போலீசார், ஆசாமி யார் என்பதையும் கண்டறிந்து அங்கு விரைந்தனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது: வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், திருச்சியை சேர்ந்த தியாகராஜன், 3௮; ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஒரு சோப்பு கம்பெனியில் இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அப்போது, 40 வயது மதிக்கதக்க திருமணமாகி குடும்பத்துடன் வசித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை பிரிந்து விட்டார்.
இந்நிலையில் தான் குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அப்பெண்ணிடமும், சோப்பு கம்பெனியிலும் விசாரித்தும், தியாகராஜன் குறித்து தகவல் இல்லை. இவ்வாறு போலீசார் கூறினர். இதனிடையே ஈரோடு மூலப்பட்டறையில் பதுங்கியிருந்த தியாகராஜனை போலீசார் கைது செய்தனர்.