/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லைவிபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லைவிபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லைவிபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லைவிபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 27, 2025 01:39 AM
வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லைவிபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கரூர்:சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் இருப்பது தெரியாமல், இரவில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதால், அதில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் இருந்து, வையாபுரி கவுண்டனுார் செல்லும் சாலையில், விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டது. அதில், வெள்ளைக்கோ-டுகள் இல்லை. அந்த வழியே வாகனங்களில் வருவோர், வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக செல்லும் போது விபத்தில் சிக்குகின்றனர்.
கிராம சாலையாக இருப்பதால், போதிய அளவில் வெளிச்சம் இல்லை. இரவு நேரத்தில் செல்வோர், நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே, வேகத்தடை மீது வெள்ளை வண்ணம் பூச நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்
கின்றனர்.