/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே பாலத்தில் கம்பி வேலிபாதை வழங்க எம்.பி., முறையீடு
/
ரயில்வே பாலத்தில் கம்பி வேலிபாதை வழங்க எம்.பி., முறையீடு
ரயில்வே பாலத்தில் கம்பி வேலிபாதை வழங்க எம்.பி., முறையீடு
ரயில்வே பாலத்தில் கம்பி வேலிபாதை வழங்க எம்.பி., முறையீடு
ADDED : மார் 30, 2025 01:13 AM
ரயில்வே பாலத்தில் கம்பி வேலிபாதை வழங்க எம்.பி., முறையீடு
ஈரோடு:சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:சென்னை - கோவை வரையிலான அகல ரயில் பாதையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா ஈங்கூர், விஜயமங்கலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே சென்னிமலை, துலுக்கம்பாளையம் அமைந்துள்ளது. இங்கு, 415/600 கி.மீ.,ல், சிறு ரயில்வே பாலம்
உள்ளது. இப்பாலம் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் பெருந்துறை சிப்காட் மற்றும் பெருந்துறைக்கு சென்று வருகின்றனர். இந்த ரயில்வே பாதையில், இருபுறமும்
கம்பிவேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் துலுக்கம்பாளையம் அருகே தார் ரோட்டில் இருந்து, 415/200 கி.மீ., முதல் 415/600 கி.மீ., வரை இப்பாலத்துக்கு சென்று வந்த பாதை முற்றிலும் அடைபடுகிறது.
இதனால், இப்பாலம் வழியாக சென்று வரும் நுாற்றுக்கணக்கான மக்கள், 5 கி.மீ., துாரம் உள்ள ஈங்கூர் அல்லது எளையாம்பாளையம் சுற்றி, சிப்காட் அல்லது பெருந்துறை செல்ல வேண்டிய சிரமம் ஏற்படும்.
எனவே அவ்விடத்தில், இருபுறமும் மக்கள் சென்று வர வசதியாக, குறைந்த பட்சம், 6 அடி அகல பாதையை விட்டு, கம்பி வேலி அமைக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.