/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு'ஏ.டி.எம்., இயந்திரம் உடைஞ்சு போச்சு...!

ADDED : ஏப் 01, 2025 01:28 AM
'போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு'ஏ.டி.எம்., இயந்திரம் உடைஞ்சு போச்சு...!
ஈரோடு:ஈரோடு, கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் முரளி, 35; தனியார் நிறுவனம் சார்பில் மாநகராட்சி பகுதியில் தண்ணீர் திறக்கும் பணி செய்கிறார். நேற்று முன் தினம் இரவு தன் வீட்டருகே, திருநகர் காலனியில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு சென்றார். அங்கு இரு மிஷின் உள்ளது. ஒரு மிஷினில் கார்டை சொருகி பணம் எடுக்க முயற்சித்துள்ளார். நீண்ட நேரமாகியும் பணம் வராததால், ஆத்திரமடைந்த முரளி மிஷினை காலால் உதைக்க, ஒரு பகுதி சேதம் அடைந்தது. மேலும் கார்டு சொருகும் பகுதியில் கையால் குத்தியதில் சேதமடைந்தது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். நேற்று காலை ஏ.டி.எம்., காவலாளி வந்து பார்த்தபோதுதான் மிஷின் சேதமானது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் தரப்பில், கருங்கல்பாளையம் போலீசில் புகார் தரப்பட்டது.
ஏ.டி.எம்., மையத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், முரளி என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். மிஷினை சேதப்படுத்தியபோது முரளி குடிபோதையில் இருந்துள்ளார். இதுபோன்ற செயல்களில் அவர் பலமுறை ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.