/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலி பணியிடங்களை நிரப்ப கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்
/
காலி பணியிடங்களை நிரப்ப கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 08, 2025 02:04 AM
காலி பணியிடங்களை நிரப்ப கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட துணை தலைவர் ராஜா தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் குமரேசன் முன்னிலை வகித்து பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 'அக்ரி ஸ்டேக்' பணியில் வருவாய் ஆய்வாளர்களை ஈடுபடுத்துவதை ரத்து செய்து, தொடர்புடைய அலுவலர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படை பணி நியமன உச்சவரம்பை, 5 சதவீதமாக குறைத்துள்ளதை, 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில், 2023 மார்ச், 31 முதல் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.