/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

ADDED : ஏப் 10, 2025 01:15 AM
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
அந்தியூர்:அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா, கடந்த மாதம், 20ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 26ல் மகிஷாசுரமர்த்தனம், ஏப்., 2ல், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில், யானை, நரி, சிம்ம, ஹம்ச வாகனத்தில், அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவிலிருந்து குண்டம் இறங்க, கோவில் வளாகம், வரிசையில் செல்ல அமைக்கப்பட்ட பகுதி ஆகிய இடங்களில் வீரமக்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலுக்கு முன், அம்மன் அழைத்தல், வாக்கு கேட்டல் ஆகியன நடந்தன. இதையடுத்து நேற்று காலை, 7:45 மணிக்கு தலைமை பூசாரி குண்டத்தை சுற்றி வந்து, குண்டம் முன் மண்டியிட்டு, தீக்கங்குகளை மூன்று முறை வாரி இறைத்தார்.
அதன்பின், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என, ஒவ்வொருவராக, 5,000க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தவிட்டுப்பாளையம், அந்தியூர் பகுதியிலுள்ள பக்தர்கள், விதவிதமான அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, பக்தர்கள் குண்டம் இறங்கினர். குண்டத்தில் உப்பு பாக்கெட்டுகளை துாவி பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். ஆங்காங்கே, வீரமக்களுக்கு தேவையான பழ ஜூஸ், மோர், தண்ணீர் ஆகியவற்றை தன்னார்வலர்களும், சிவனடியார்களும் இலவசமாக கொடுத்தனர்.
இதேபோல், வாடகை கார் ஓட்டுனர்கள் சார்பில், கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். குண்டம் விழாவை முன்னிட்டு, நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.