/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு - ராமேஸ்வரம் இணைப்பு ரயில் வசதி
/
ஈரோடு - ராமேஸ்வரம் இணைப்பு ரயில் வசதி
ADDED : பிப் 13, 2012 02:18 AM
ஈரோடு: ஈரோட்டில் இருந்து மதுரை, திருச்சி வழியாக ராமேஸ்வரம் செல்ல இணைப்பு
ரயில் சேவை வசதியை பயன்படுத்துமாறு ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ஈரோட்டில் இருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்ல இணைப்பு ரயில் சேவை வசதி
விபரம்:வியாழன்தோறும் ஈரோட்டில் மதியம் 12.30க்கு புறப்படும் 'ஓகா'
எக்ஸ்பிரஸ் ரயில், மதுரைக்கு மாலை 4 மணிக்கும், ராமேஸ்வரத்துக்கு இரவு
7.50க்கும் சென்றடையும்.திருநெல்வேலி பாசஞ்சர் ரயில், ஈரோட்டில் தினசரி
மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.45க்கு மதுரை சென்றடையும்.
அங்கிருந்து மாலை 6.15க்கு புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலில்
ஏறினால், இரவு 10.35க்கு ராமேஸ்வரம் சென்றடையலாம். மதுரையில் இருந்து இரவு
12.10க்கு புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலில் ஏறினால், அதிகாலை
3.45க்கு ராமேஸ்வரம் சென்றடையலாம்.
தினமும் கோவையில் இருந்து புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு
10.10க்கு ஈரோடு வருகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் இந்த
ரயிலில் ஏறினால், மதுரைக்கு அதிகாலை 2.05க்கு செல்லும். அங்கிருந்து
இம்மூன்று நாட்கள் மட்டும், அதிகாலை 2.20க்கு கன்னியாகுமரி - ராமேஸ்வரம்
எக்ஸ்பிரஸ் வருகிறது. அந்த ரயிலில் ஏறினால், காலை 5.20க்கு ராமேஸ்வரம்
அடையலாம். இதுதவிர, தினசரி மதுரையில் இருந்து காலை 6.15க்கு ராமேஸ்வரம்
பாசஞ்சர் புறப்பட்டு, காலை 10.05க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.ஈரோட்டில்
இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரம் செல்லும் இணைப்பு ரயில் சேவை வசதி
விபரம்:
மைசூருவிலிருந்து மயிலாடு துறை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்,
ஈரோட்டுக்கு இரவு 12.50க்கு வருகிறது. திருச்சிக்கு அதிகாலை 3.55க்கு
சென்றடைகிறது. அதேபோல், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும்
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், இரவு 12.20க்கு ஈரோடு வந்து, 12.30க்கு புறப்பட்டு
செல்கிறது. திருச்சிக்கு அதிகாலை 3.25க்கு சென்றடைகிறது.சென்னையில்
இருந்து தினசரி இயக்கப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு காலை
5.20க்கு வந்து, 5.30க்கு புறப்படுகிறது. காலை 11.45க்கு ராமேஸ்வரம்
சென்றடைகிறது. திருச்சியில் இருந்து தினசரி இயக்கப்படும் ராமேஸ்வரம்
பாசஞ்சர், காலை 6.15க்கு புறப்பட்டு, மதியம் 12.45க்கு ராமேஸ்வரம்
சென்றடைகிறது.பாலக்காட்டில் இருந்து புறப்படும் திருச்சி பாசஞ்சர்,
ஈரோட்டுக்கு காலை 10.15க்கு வந்து, 10.35க்கு திருச்சி புறப்பட்டு, மதியம்
1.45க்கு சென்றடைகிறது. வெள்ளி மட்டும் இயக்கப்படும் புவனேஸ்வர்
எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு மாலை 5.05க்கு வந்து 5.15க்கு ராமேஸ்வரம்
புறப்பட்டு, இரவு 11.55க்கு சென்றடைகிறது. சனி மட்டும் இயக்கப்படும்
வாரணாசி எக்ஸ்பிரஸ், மாலை 6 மணிக்கு திருச்சி வந்து, 6.05க்கு ராமேஸ்வரம்
புறப்பட்டு, இரவு 1.15க்கு சென்றடைகிறது.
மங்களூருவிலிருந்து தினசரி புறப்பட்டு சென்னை எக்மோர் செல்லும் எக்ஸ்பிரஸ்,
மாலை 5.55க்கு ஈரோடு வந்து, 6.05க்கு திருச்சி புறப்பட்டு, இரவு 9.50க்கு
சென்றடைகிறது. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் ராமேஸ்வரம்
எக்ஸ்பிரஸ், இரவு 10.25க்கு திருச்சி வந்து, 10.35க்கு ராமேஸ்வரம்
புறப்பட்டு, காலை 4.45க்கு சென்றடைகிறது.பயணிகள் இந்த இணைப்பு ரயில் சேவை
வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.