/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு
ADDED : அக் 23, 2025 01:35 AM
ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வரும் பொதுமக்கள், தங்களது இரு சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதால், பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் பயணிகளும் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு புகார்கள் வந்ததால் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டது.
இருப்பினும் உத்தரவை மீறி நிறுத்தப்பட்டிருந்த, இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டு போடும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். அப்போது சிலர் உடனடியாக தங்களது வாகனங்களை எடுத்து சென்றனர். மீதமுள்ள வாகனங்கள் மட்டும் சங்கிலியால் இணைத்து பூட்டு போடப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,' பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. முதல் முறை என்பதால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்கள், மாநகராட்சி அலுவலகம் வந்து ஒப்புதல் பெற்று வாகனத்தை எடுத்து செல்லலாம். மீண்டும் நடந்தால் அபராதம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் போலீஸ் தரப்பிலும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்,' என்றனர்.