/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை அருகே மீண்டும் நாய்கள் கடித்து 18 ஆடுகள் பலிபோராட சென்ற விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

ADDED : மார் 08, 2025 02:47 AM
சென்னிமலை அருகே மீண்டும் நாய்கள் கடித்து 18 ஆடுகள் பலிபோராட சென்ற விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது
சென்னிமலை:சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் ஊராட்சி ஓலப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சென்னியப்பன், 74; ஓலப்பாளையம் பழனி காட்டு தோட்டத்தில் பட்டி அமைத்து, 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று அதிகாலை பட்டிக்கு சென்றபோது, 15 பெரிய ஆடுகள், மூன்று குட்டிகள் இறந்து கிடந்தன. ஏழு ஆடுகள், மூன்று குட்டிகள் உயிருக்கு போராடியபடி கிடந்தன. சம்பவம் அறிந்து அப்பகுதி விவசாயிகள் திரண்டனர்.
ஊராட்சி முன்னாள் தலைவர் நாகராஜ் பார்வையிட்டு, சென்னிமலை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார், சென்னிமலை ஆர்.ஐ., சிலம்பரசன், வி.ஏ.ஓ., வேலுசாமி மற்றும் கால்நடை மருத்துவர்கள், சென்னிமலை வனக்காப்பாளர் முருகன் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.
சென்னிமலை பகுதியில் தெருநாய்கள் கடித்து கால்நடைகள் இறப்பது தொடர்கதையாகி விட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவத்தின்போது வரும் அதிகாரிகள், ஆளும்கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறி செல்கின்றனர். ஆனால், இரண்டு ஆண்டாக நாய்களால் கால்நடைகளை இழந்து பல விவசாயிகள் பாதித்துள்ளனர் என்று கூறி, இறந்த ஆடுகளுடன் பெருந்துறை தாசில்தார் அலுவலகத்துக்கு போராட்டத்தில் ஈடுபட செல்ல முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி, 13 பெண்கள் உட்பட, 41 பேரை கைது செய்து, குமாரபுரியில் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இவர்களை பார்க்க மாலையில், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் ஈசன், சென்னிமலை ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள், அ.தி.மு.க., நெசவாளரணி ஒன்றிய செயலாளர் சண்முகம், கொ.ம.தே.க., கொள்கை பரப்பு செயலாளர் பாலு உள்பட, 30 பேர் சென்றனர். போலீசார் அனுமதிக்காததால் மண்டபம் எதிரே சென்னிமலை-ஈரோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீசார் கைது செய்தனர். தொடர் சம்பவங்களால் காலை முதல் மாலை வரை சென்னிமலை பரபரப்பாக காணப்பட்டது.