/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாளர் பொறியியல் தொழில் நுட்ப கல்லுாரியின் 19வது பட்டமளிப்பு விழா
/
வேளாளர் பொறியியல் தொழில் நுட்ப கல்லுாரியின் 19வது பட்டமளிப்பு விழா
வேளாளர் பொறியியல் தொழில் நுட்ப கல்லுாரியின் 19வது பட்டமளிப்பு விழா
வேளாளர் பொறியியல் தொழில் நுட்ப கல்லுாரியின் 19வது பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 25, 2024 01:32 AM
ஈரோடு, ஆக. 25-
திண்டல் வேளாளர் பொறியியல் தொழில் நுட்ப கல்லுாரி, 19வது பட்டமளிப்பு விழாவில், 783 பேர் பட்டம் பெற்றனர்.
ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரியின், 19வது பட்டமளிப்பு விழா நடந்தது. வேளாளர் அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளரும், கல்லுாரி தாளாருமான சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் ஏரோநாட்டிகல் வளர்ச்சி நிறுவன திட்ட இயக்குனர், விஞ்ஞானி மதுசூதன ராவ் பங்ககேற்று, 783 மாணவ--மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பிடித்த, 45 பேரை பாராட்டி கவுரவித்து பேசினார்.
கடந்த, 2023--24ம் கல்வியாண்டில், 1,529 மாணவ--மாணவியருக்கு, வேளாளர் அறக்கட்டளை மூலம், 5.7௦ கோடி ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
முன்னதாக கல்லுாரி முதல்வர் ஜெயராமன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லுாரி பேராசியை, பேராசிரியர்கள், மாணவ--மாணவியர், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.