/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில்தைப்பூச விழா; 2வது நாள் தேரோட்டம்
/
சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில்தைப்பூச விழா; 2வது நாள் தேரோட்டம்
சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில்தைப்பூச விழா; 2வது நாள் தேரோட்டம்
சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில்தைப்பூச விழா; 2வது நாள் தேரோட்டம்
ADDED : பிப் 13, 2025 01:11 AM
சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில்தைப்பூச விழா; 2வது நாள் தேரோட்டம்
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு மாலை 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்து, பக்தர்களால் இழுக்கப்பட்டு சிறிது துாரம் சென்றதும், 5:00 மணிக்கு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தேர் முன் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று மாலை, 4:00 மணிக்கு பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டது. முன் தேரில் வீரபாகு, அஸ்திரதேவர், விநாயகர் வழிநடத்தி செல்ல, பின் தேரில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் மலையை சுற்றிவந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாளான இன்று மாலை தேர் நிலை அடைகிறது.
விழாவையொட்டி காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் குழுவாக சேர்ந்து விரதம் இருந்து காவடி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இரத்தினாம்பாள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். காங்கேயம் டி.எஸ்.பி மாயவன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.