/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் 'ஹிலாரியோ-25' கலைத்திறன்
/
நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் 'ஹிலாரியோ-25' கலைத்திறன்
நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் 'ஹிலாரியோ-25' கலைத்திறன்
நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் 'ஹிலாரியோ-25' கலைத்திறன்
ADDED : பிப் 02, 2025 01:15 AM
நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் 'ஹிலாரியோ-25' கலைத்திறன்
ஈரோடு :ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு கல்லுாரிகளுக்கு இடையேயான, 'ஹிலாரியோ-25' என்ற கலைத்திறன் போட்டி நடந்தது. நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றினார். செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், கல்லுாரி முதல்வர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் கோமதி வரவேற்றார்.
முதல் நாள் விழாவில், ஈ.எல்.எம்., பேபரிகேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வரும், பேச்சாளரும், எழுத்தாளருமான கவிஞர் அருள்பிரகாஷ் பேசினார். இரண்டாம் நாள் போட்டியில், தொலைக்காட்சி கலைஞர்கள் பவித்ரா லட்சுமி, சரத், தங்கதுரை, ராவணராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் வரவேற்றார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் பரிசு வழங்கினார். கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. விழா ஏற்பாடுகளை செய்த நிர்வாக அலுவலர் சீனிவாசன், துறைத்தலைவர்கள், உதவி பேராசிரியர்களை,
கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.