/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சின்டிகேட் போடாமல் நடந்த ஏலம்பேரூராட்சிக்கு ரூ.5.53 லட்சம் கூடுதல் வருவாய்

ADDED : பிப் 26, 2025 01:08 AM
சின்டிகேட் போடாமல் நடந்த ஏலம்பேரூராட்சிக்கு ரூ.5.53 லட்சம் கூடுதல் வருவாய்
சென்னிமலை:சென்னிமலையில் வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும், வாரச்சந்தைக்கான நடப்பாண்டு சுங்க ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமையில், செயல் அலுவலர் மகேந்திரன், துணை தலைவர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். ஏலத்தை தி.மு.க., நகர செயலாளர் ராமசாமி, ௮.2௯ லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு, ௪.௭௬ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடும் போட்டியால் ஏலத்தொகை நடப்பாண்டு உயர்ந்துள்ளது.
பேரூராட்சி பகுதிகளில் சுங்கம் வசூலிக்கும் ஏலத்தை செந்தில்குமார் என்பவர், ௪.௨௫ லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
இது கடந்த ஆண்டு, ௨.௩௯ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிருந்தது. குமரன் தினசரி மார்கெட் கடை சுங்கம் வசூலிக்கும் ஏலத்தையும், ௨.௮௧ லட்சம் ரூபாய்க்கு செந்தில்குமார் எடுத்தார். இது கடந்த ஆண்டு, 99 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
மூன்று ஏலத்திலும் கடந்த ஆண்டை விட பேரூராட்சி நிர்வாகத்துக்கு, ௫.௫௩ லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
சிண்டிகெட் அமைக்காமல் ஏலம் வெளிப்படையாக நடந்ததால், கூடுதல் வருவாய் கிடைத்ததாக, பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.