/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டியில் புகுந்து நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் பலி
/
பட்டியில் புகுந்து நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் பலி
பட்டியில் புகுந்து நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் பலி
பட்டியில் புகுந்து நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் பலி
ADDED : ஜன 15, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டியில் புகுந்து நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் பலி
பெருந்துறை:
பெருந்துறை ஒன்றியம் பள்ளபாளையம், பிள்ளையார் வீதியை சேர்ந்தவர் கோகுல் பிரசாத். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தனது ஆடுகளை பட்டியில் அடைத்தார். நேற்று காலை எழுது பார்த்தபோது, நான்கு ஆடுகள் மற்றும் நான்கு குட்டிகள் இறந்து கிடந்தன. 11 ஆடுகள் காயத்துடன் போராடி கொண்டிருந்தன. தெருநாய்கள் கடித்ததால் ஆடுகள் இறந்ததாக கூறி, காஞ்சிக்கோவில் நால்ரோட்டில் ஆட்டின் உடல்களை போட்டு வைத்தார். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆடுகளை எடுத்து சென்று விட்டார்.