/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேன் மீது ராட்சத கிரேன் மோதியதில் 8 பேர் காயம்
/
வேன் மீது ராட்சத கிரேன் மோதியதில் 8 பேர் காயம்
ADDED : ஜன 18, 2025 01:32 AM
வேன் மீது ராட்சத கிரேன் மோதியதில் 8 பேர் காயம்
பவானி, : அம்மாபேட்டை அருகே பட்லுார் நால்ரோட்டில், தனியார் பனியன் நிறுவனம் உள்ளது.
இங்கு பணிபுரியும் மேட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதி தொழிலாளர்கள், 13 பேரை ஏற்றிக்கொண்டு, மேட்டூருக்கு நேற்று மாலை வேன் சென்றது. மேட்டூரை சேர்ந்த திருமூர்த்தி, 52, ஓட்டினார். முகாசிப்புதுார் அருகே சென்றபோது, எதிரே வந்த ராட்சத கிரேனின் முன்பகுதி கொக்கி, வேன் முன்பகுதியில் மோதியது. இதில் வேன் நிலைகுலைந்து தொழிலாளர்கள் உருண்டு விழுந்தனர். மேட்டூரை சேர்ந்த ரம்யா, தங்கமணி, ரமணி உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.
அனைவரும் அந்தியூர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.