/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் 'யு-டர்ன்' எடுக்க வசதி போக்குவரத்து நெரிசலால் தடுப்பு
/
சாலையில் 'யு-டர்ன்' எடுக்க வசதி போக்குவரத்து நெரிசலால் தடுப்பு
சாலையில் 'யு-டர்ன்' எடுக்க வசதி போக்குவரத்து நெரிசலால் தடுப்பு
சாலையில் 'யு-டர்ன்' எடுக்க வசதி போக்குவரத்து நெரிசலால் தடுப்பு
ADDED : செப் 02, 2024 02:49 AM
ஈரோடு: ஈரோட்டில் மேட்டூர் சாலையில் பரிமளம் காம்ப்ளக்ஸ் அருகே, வாகனங்கள் 'யு-டர்ன்' எடுக்க வசதியாக பேரிகார்டு எடுத்து விடப்பட்டிருந்தது. இதனால் சாலையில் சில தினங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது. மேலும் விபத்து அபாயமும் காணப்பட்டது. இதனால் பேரிகார்டுகளை சாலை நடுவே வைத்து, வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் வைத்தனர்.
இதையடுத்து வாகனங்கள் சாலையின் நடுவே யு-டர்ன் எடுக்காமல் இருக்கும் விதமாக பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் சாலையில் வாகனங்கள் சீராக சென்று வரும். வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.