/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாய் உயிரிழந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் மகளும் உயிரிழப்பு
/
தாய் உயிரிழந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் மகளும் உயிரிழப்பு
தாய் உயிரிழந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் மகளும் உயிரிழப்பு
தாய் உயிரிழந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் மகளும் உயிரிழப்பு
ADDED : ஆக 01, 2024 02:22 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், தாய் உயிரிழந்த அதிர்ச்சியில், மார-டைப்பால் மகளும் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, பாரதி வீதியை சேர்ந்-தவர் கண்ணம்மாள், 81. கணவர் ரங்கசாமி இறந்துவிட்ட நிலையில், மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வயது மூப்பு காரணமாக, கண்-ணம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். தன் தாயை பார்ப்பதற்காக கோவை மாவட்டம், மேட்டுப்பாளை-யத்தில் இருந்து மகள் சாந்தி, 60, நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் இரவு கண்ணம்மாள் காலமானார். இதையடுத்து, தனது தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகள் சாந்திக்கு, நெஞ்சு வலி ஏற்-பட்டு மாரடைப்பு காரணமாக அவரும், அவரது தாய் உயிரிழந்த அதே இடத்தில் இறந்துள் ளார். தாய், மகள் உயிரிழந்ததை கண்டு குடும்பமே கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
நேற்று மாலை இருவரது உடல்களும், புன்செய்புளியம்பட்டி எரி-யூட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.