/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆசிரியர்களை மிரட்டிய போலீசார்; டிட்டோ-ஜாக் புகார்
/
ஆசிரியர்களை மிரட்டிய போலீசார்; டிட்டோ-ஜாக் புகார்
ADDED : ஜூலை 31, 2024 07:16 AM
ஈரோடு: கோரிக்கையை வலியுறுத்தி, சென்னைக்கு போராட சென்ற ஆசிரியர்களை, போலீசார் எச்ச- ரித்ததாக டிட்டோ-ஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்-களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் அரசாணை 243ஐ ரத்து செய்தல், சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்-வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்-பது உள்பட, 31 அம்ச கோரிக்கையை நிறை-வேற்ற வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளா-கத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர் முற்-றுகை போராட்டம் நடக்கிறது. நேற்று ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் பங்-கேற்றனர். இன்றும் முற்றுகை போராட்டம் நடக்-கிறது. இதுபற்றி டிட்டோ-ஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முத்து ராமசாமி கூறியதாவது:டிட்டோ ஜாக்கில் தமிழகம் முழுவதும், 12 சங்-கங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் தமிழ்-நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்ட-ணிகள் இடம் பெற்றுள்ளன.இன்று (நேற்று) தொடக்க, நடுநிலை பள்ளி ஆசி-ரியர்கள், 2,500 பேர் தற்செயல் விடுப்பு எடுத்துள்-ளனர். இதில், 1,650 பேர் சென்னையில் நடக்கும் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பள்ளிகளுக்கு, வீடுகளுக்கு சென்று ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களை மிரட்டும் செயலில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஸ்கள், ரயில்கள் மூலம் சென்னை வர முற்பட்ட ஆசிரி-யர்கள், போலீசாரால் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.அந்தியூரில் இருந்து சென்னையில் நடக்கும் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆசி-ரியர்களின் பஸ்சை நிறுத்திய போலீசார், 100 பேரை எச்சரித்து இறக்கி விட்டுள்ளனர்.இதேபோல் அம்மாபேட்டை பகுதியில் இருந்து கிளம்பிய பஸ்சையும் நிறுத்த முயற்சித்து தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் முற்றுகை போராட்டத்துக்கு வந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.