/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ. 33.97 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்
/
ரூ. 33.97 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்
ADDED : செப் 18, 2024 07:04 AM
கொடுமுடி: கொடுமுடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய், ரூ.33.97 லட்சத்துக்கு ஏலம் போனது.
கொடுமுடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய், கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 373 தேங்காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 32.65 ரூபாய், அதிகபட்சமாக, 36.75 ரூபாய், சராசரியாக, 35.05 ரூபாய்க்கு ஏலம் போனது.
கொப்பரை தேங்காய் முதல் தரம் கிலோ குறைந்தபட்சமாக, 110.59 ரூபாய், அதிகபட்சமாக, 117.59 ரூபாய், சராசரியாக, 110.59 ரூபாய்க்கு ஏலம் போனது. இரண்டாம் தரம் குறைந்தபட்சம், 90.69, அதிகபட்சம், 112.99, சராசரியாக, 106.42 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 33 லட்சத்து, 97 ஆயிரத்து, 940 ரூபாய்க்கு விற்பனையானதாக, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.