/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசின் ஆதார திட்டத்தில் கொப்பரை கொள்முதல்
/
அரசின் ஆதார திட்டத்தில் கொப்பரை கொள்முதல்
ADDED : அக் 22, 2024 01:31 AM
ஈரோடு, அக். 22-
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக, அந்தியூர், அவல்பூந்துறை, பவானி, பூதப்பாடி, எழுமாத்துார், கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மைலம்பாடி, சத்தி, சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், வெப்பிலி துணை விற்பனை கூடத்திலும் வரும், டிச., 10 வரை மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தில், கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
ஒரு கிலோ அரவை கொப்பரை, 111.60 ரூபாய், ஒரு கிலோ பந்து கொப்பரை, 120 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். திட்டத்தில் விற்பனை செய்ய விரும்பு விவசாயிகள், தங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கில் ஆகியவற்றின் நகல்களுடன், ஈரோடு விற்பனை குழு தலைமை அலுவலகத்தை
அணுகலாம்.

