/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவுநாள் அனுசரிப்பு
/
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவுநாள் அனுசரிப்பு
ADDED : ஜன 05, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவுநாள் அனுசரிப்பு
ஈரோடுஈரோடு கிழக்கு தொகுதி காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மறைந்த திருமகன் ஈவெரா, இரண்டாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட காங்., சார்பில், பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில், அவரது உருவப்படத்துக்கு, அவரது இளைய சகோதரர் சஞ்சய் சம்பத் தலைமை வகித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி, தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, காங்., நிர்வாகிகள் திருச்செல்வன், ஜாபர்சாதிக், விஜயபாஸ்கர், ராஜேஷ் ராஜப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

