/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்பாளரின் செலவு கணக்குஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு
/
வேட்பாளரின் செலவு கணக்குஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு
வேட்பாளரின் செலவு கணக்குஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு
வேட்பாளரின் செலவு கணக்குஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு
ADDED : ஜன 19, 2025 01:43 AM
வேட்பாளரின் செலவு கணக்குஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு
ஈரோடு, :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக செலவின பார்வையாளராக தினேஷ்குமார் ஜாங்கிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் செலவினங்கள் தொடர்பான செலவின கணக்குகள், ஒத்திசைவு கூட்டம் பார்வையாளர் மூலம் நடத்தப்பட உள்ளது.
இதன்படி வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து, 20ம் தேதி வரை உள்ள வேட்பாளரின் செலவின கணக்குகளை வரும், 21ல் ஆய்வு செய்கிறார். வரும், 21 முதல், 26 வரை உள்ள செலவின கணக்குகளை, 27ம் தேதி; 27 முதல், பிப்., 2 வரை உள்ள கணக்குகளை, பிப்.,௨ல் ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி புதிய கட்டட முதல் தளத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
இந்த கூட்டங்களில், வேட்பாளர்கள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், செலவு கணக்குகள், வங்கி கணக்கு புத்தகம், அன்றாட செலவின கணக்கு பதிவேடு ஆகியவற்றை முறையாக பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்.