/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மோட்டாரில் ஒயர் திருடிய ஆசாமி 'சுடச்சுட' சிக்கினார்
/
மோட்டாரில் ஒயர் திருடிய ஆசாமி 'சுடச்சுட' சிக்கினார்
மோட்டாரில் ஒயர் திருடிய ஆசாமி 'சுடச்சுட' சிக்கினார்
மோட்டாரில் ஒயர் திருடிய ஆசாமி 'சுடச்சுட' சிக்கினார்
ADDED : ஜன 24, 2025 01:20 AM
மோட்டாரில் ஒயர் திருடிய ஆசாமி 'சுடச்சுட' சிக்கினார்
நம்பியூர்,:நம்பியூர் அருகே கோட்டுபுள்ளம்பாளையம், நாச்சிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார், 43; குருமந்துார் ஊராட்சி முன்னாள் தலைவர். அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு, மேலும் இருவருடன் நேற்று மதியம் சென்றார். அப்போது அப்பகுதியில் ஒயரை தீயால் கருக்கிக் கொண்டிருந்தவரை பார்த்து விபரம் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், டி.என்.பாளையத்தை அடுத்த பெருமுகை, வரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, 39, என்பது தெரிந்தது. குருமந்துாரில் சாலையோரம் இருந்த போர்வெல் ஒயரை திருடி, தீயில் கருக்கி, காப்பரை சேகரிக்க முயன்றது தெரிந்தது. அவரிடம், ஒரு கிலோ காப்பர் ஒயரை பறிமுதல் செய்து கைது செய்தனர். கோபி இரண்டாவது மாஜிஸ்திேரட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர்.* கோபி அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி வடிவேல், 50; இவரது தோட்டத்து மின் மோட்டாரில், 95 மீட்டர் நீளமுள்ள ஒயரை துண்டித்து திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.