/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிமக்கள் அமைதி போராட்டம்
/
வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிமக்கள் அமைதி போராட்டம்
வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிமக்கள் அமைதி போராட்டம்
வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிமக்கள் அமைதி போராட்டம்
ADDED : ஜன 24, 2025 01:24 AM
வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிமக்கள் அமைதி போராட்டம்
பவானி,: பவானி அருகேயுள்ள பெருமாள்மலை மங்களகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 30 ஆண்டுக்கும் மேலாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நிலத்தை அளவீடு செய்ய, கோவில் செயல் அலுவலர் கயல்விழி உள்ளிட்டோர், சில நாட்களுக்கு முன் சென்றனர். அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பினர்.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளிலும், ஊருக்குள்ளும், வீட்டுமனை பட்டா, குடிநீர் இணைப்பு கேட்டு, நேற்று கறுப்புக்கொடி கட்டி அமைதி போராட்டத்தில்
ஈடுபட்டனர்.