/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தலால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்
/
தேர்தலால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்
ADDED : பிப் 05, 2025 01:20 AM
தேர்தலால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்
ஈரோடு, : ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதி, கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், அதனை சுற்றிய மணிக்கூண்டு சாலை, டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதிகள், காந்திஜி சாலை போன்ற பகுதிகளிலும், பனியன் மார்க்கெட் பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை ஜவுளிச்சந்தை விற்பனை
நடந்தது. மொத்த, சில்லறை விற்பனைக்கான ஜவுளி வியாபாரிகள், நிறுவனங்களில் நேரடி விற்பனை கடைகள், வாகனங்கள், குடோன்களில் வைத்தும் ஜவுளி விற்பனை நடந்தது.
கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பின் விற்பனை குறைந்தது. அத்துடன் கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிப்பால் பறக்கும் படையினர் கெடுபிடியும் அதிகரித்ததால், ஜவுளி வாங்க வருவோர் எண்ணிக்கையும் குறைந்தது. நேற்றைய வாரச்சந்தையில் கடைகள்
அதிகமாக போடப்பட்ட நிலையிலும் சில்லறை விற்பனை மட்டுமே நடந்தது. மொத்த ஜவுளி விற்பனை குறைந்த அளவே நடந்தது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதி, கேரளா,
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், கடைக்காரர்கள் குறைந்த அளவே வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.