/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் உற்சாகமாக நடந்த 'நிலாச்சோறு' திருவிழா
/
மாவட்டத்தில் உற்சாகமாக நடந்த 'நிலாச்சோறு' திருவிழா
மாவட்டத்தில் உற்சாகமாக நடந்த 'நிலாச்சோறு' திருவிழா
மாவட்டத்தில் உற்சாகமாக நடந்த 'நிலாச்சோறு' திருவிழா
ADDED : பிப் 12, 2025 01:09 AM
மாவட்டத்தில் உற்சாகமாக நடந்த 'நிலாச்சோறு' திருவிழா
சென்னிமலை :சென்னிமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள, 45க்கும் மேற்பட்ட கிராமங்களில், தை மாதத்தில் நிலாச்சோறு திருவிழா, பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு விழா கடந்த, ௬ம் தேதி தொடங்கியது. ஐந்தாம் நாளான நேற்றிரவு பவுர்ணமி இரவில் விடியவிடிய விழா நடந்தது.
இந்த நிகழ்வில் கிராமத்தில் பெரியவாசல் உள்ள வீட்டில் அல்லது பொது இடத்தில், பெண்கள் மாட்டு சாணத்தால் மெழுகி வண்ணக் கோலமிட்டு, பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரவர் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை வைத்து பூஜை செய்வர்.
பூஜை செய்த பலகாரம், உணவு களை சாப்பிட்டு விட்டு, உக்கை எனக்கூறி களிமண் கொண்டு ஒரு சதுர வடிவமாக செய்து அதற்கு மலர் அலங்காரம் செய்து, அதை சுற்றி பெண்கள் பாட்டுப்பாடி கும்மி கொட்டி கொண்டாடுவர். ஐந்து நாட்கள் இந்த விழா களை கட்டும்.
இதில் பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்வர். ஒரு சில இடங்களில் ஆண்களும்
கும்மியடித்து வழிபாடு செய்வர். ஐந்து நாட்களும் நிலவு வெளிச்சத்தில் மட்டுமே நடந்த இந்த விழா, பவுர்ணமி இரவான நேற்றிரவு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு, நிறைவுக்கு
வந்தது.
* ஈரோடு அருகே கைகாட்டி வலசு, திருவள்ளுவர் நகரில், நிலாச்சோறு நிறைவு விழா வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் இரவில் மாவிளக்கு எடுத்து வந்து, ஊரின் மையப்பகுதியில் படையலிட்டு, பெண்கள் கும்மியடித்து, கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். விழாவில் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.
* பெருந்துறை பகுதியில் காஞ்சிக்கோவில், நல்லாம்பட்டி, வெள்ளோடு, திங்களூர் உட்பட பல கிராமங்களில், இரவில் நிலாச்சோறு திருவிழா கடந்த ஐந்து நாட்களாக நடந்தது.
இதில் பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து, தாங்கள் கொண்டு வந்த உணவுகளை பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர். சில இடங்களில் ஒலிபெருக்கிகள் கட்டி விடியவிடிய கிராமிய பாடல்களை பாடி விழா களை கட்டியது.

